M.R.V.Creations

திருமூலர் திருமந்திரம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

THIRUMOOLAR THIRUMANDHIRAM - திருமூலர் திருமந்திரம்



Shivamayam Thiruchitrrambalan - சிவமயம் திருச்சிற்றம்பலம்


Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய​

முதல் த​ந்திரம் - கல்வி


।। திருமூலர் திருமந்திரம் - முதல் த​ந்திரம் - 29. கல்வி - பாடல் 9 ( திருமந்திரத்தில் பாடல் 298) ।।

298. பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. 9

Transliteration - English


।। Thirumoolar Thirumandhiram - Mudhal Thandhiram - 29. Kalvi - Song 9( Song 298 in Thirumandhiram ) ।।

Patrradhu patrril paramanaip patrrumin
Mutrradhu ellaa mudhalvan arulperil
Kitrra viragir kilaroli vaanavar
Katrravar perinbam utrrunin draare. 9

மொழிபெயர்ப்பு


।। திருமூலர் திருமந்திரம் - முதல் த​ந்திரம் - 29. கல்வி - பாடல் 9 ( திருமந்திரத்தில் பாடல் 298 )- பொருள் ।।

" எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால் இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். "
" அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால் "
" எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட "
" உண்மைக் கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள். "


Translation


।। Thirumoolar Thirumandhiram - Mudhal Thandhiram - 29. Kalvi - Song 9( Song 298 in Thirumandhiram ) - Meaning ।।

" If you desire for acquiring something then desire to attain God and attain Him."
" The Lord who is the primordial of all existence if one attains and obtains His grace "
" we can realize that we have attained the most superior desires of all. More than the DemiGods who possess an aura obtained through penance "
" the one who attains the Lord through the true knowledge of wisdom and realize Him obtain the Supreme Blissful state. "


திருச்சிற்றம்பலம் - எல்லாம் சிவமயம்



Thiruchitrrambalam - Ellaam Shivamayam



ஓம் நமஹ் ஷிவாய!!



Om Namah Shivaya!!