M.R.V.Creations

திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி


Login     New User Signup


Sloka Vice - Explanation:

MAANIKAVAASAGAR THIRUVAASAGAM - மாணிக்கவாசகர் திருவாசகம்



Shivamayam Thiruchitrrambalan - சிவமயம் திருச்சிற்றம்பலம்


Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய​

Thiruppalliyezhuchchi - திருப்பள்ளியெழுச்சி


।। ஸ்ரீ மாணிக்கவாசகர் - திருப்பள்ளியெழுச்சி ।।

திருப்பள்ளியெழுச்சி - பாசுரம் 10

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

Transliteration - English


।। Sri Maanikkavaasagar - Thiruppalliyezhuchchi ।।

Thiruppalliyezhuchchi - Paasuram 10

Buvaniyil Poi PiRavaamaiyil NaaL Naam
PokkugindRom Avame Indhab Boomi
Sivan Uiyyak KoLgindRavaaRendRu NOkki
ThirupperundhuRaiyuRaivaai Thirumaalaam
Avan Viruppaidhavum Malaravan Aasaippadavum
Ninnalarndha MeikkaruNaiyum Neeyum
AvaniyiR Pugundhemai AatkoLLa Vallaai
Aaramudhe! PaLLi EzhundharuLaye!

மொழிபெயர்ப்பு


ஸ்ரீ மாணிக்கவாசகர் - திருப்பள்ளியெழுச்சி - பாசுரம் 10 - பொருள் மற்றும் விளக்கம்

திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!



திருச்சிற்றம்பலம்!

Translation


Sri Maanikkavaasagar - Thiruppalliyezhuchchi - Song 10 - Meaning and Explanation

"Oh Lord Shiva who resides at Thirupperundhurai! All the devotees of Lord Shiva who are born in this earth totally get enslavened by His devotion. But Lord Vishnu and Lord Brahma who was born from the navel of Lord Vishnu regret that they have wasted their days by not being born on earth. Therefore you are so graceful that with real mercy on us you have come down to this earth to get control of us. You are a nectar not attained by any! You please wake up!"

Thiruchchittrambalam!


Click Back to go to previous menu.

Om Namah Shivaya - ஓம் நமஹ் ஷிவாய