।। திருமூலர் திருமந்திரம் - முதல் தந்திரம் - 26. அறஞ்செய்யான் திறம் - பாடல் 5 ( திருமந்திரத்தில் பாடல் 264 )- பொருள் ।।
" உயிர்களெல்லாம் வணங்கித் தொழும் பரம்பொருளான இறைவனை வணங்கித் தொழாதவர்கள் "
"தருமம் கேட்டு வருகின்றவர்களுக்கு தம்மிடம் மீதமிருப்பதிலிருந்தும் ஈயின் தலையளவு கூட தர்மம் கொடுக்காதவர்கள் "
" செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை வளர்க்காதவர்கள் "
" ஆகிய இவர்கள் தங்களை நல்லவர்கள் என்று தன்னைத் தானே எண்ணிக்கொண்டு இருப்பார்கள் ஆனால் இவர்கள் இறந்தபின் நரகத்தில் தான் சென்று நிற்பார்கள் . "
Translation
।। Thirumoolar Thirumandhiram - Mudhal Thandhiram - 26. Aramseivaan Thiram - Song 5 ( Song 264 in Thirumandhiram ) - Meaning ।।
" Those who do not pray Lord Shiva who is the Ultimate Truth and is being worshipped by all living beings, "
" who do not do even a little amount of charity when people ask them for alms, "
" who do not even water the plants which they grow"
" assume themselves to be too good people but these people will surely go to hell after their death. "