Login     New User Signup
1. அ முதல் ஔ வரை உயிர் எழுத்துக்கள் ஆகும். இவை மொத்தம் 12. உயிர் எழுத்து ஒரு வார்த்தையின் முதலில் மட்டுமே இடம்பெறும். நடுவிலோ அல்லது இறுதியிலோ அல்ல.
2. க் முதல் ன் வரை மெய் எழுத்துக்கள் ஆகும். இவை மொத்தம் 18. மெய் எழுத்து ஒரு வார்த்தையின் நடுவில் அல்லது இறுதியில் மட்டுமே இடம்பெறும். முதலில் அல்ல.
3. க முதல் னௌ வரை உயிர் மெய் எழுத்துக்கள் ஆகும். இவை மொத்தம் 216. உயிர் மெய் எழுத்து ஒரு வார்த்தையின் முதலில், நடுவில், முடிவில் - என்று எங்கு வேண்டுமானலும் இடம்பெறும்.
4. ஃ - ஆயுத எழுத்து - 1- ஒரு வார்த்தையின் நடுவில் மட்டுமே இடம்பெறும்.
மொத்தம் தமிழ் எழுத்துக்கள் - 247
தனிப்பட்ட மெய் எழுத்து பொருள் அற்றது. எவ்வாறு உடலில் உயிர் என்பது இருந்தால் தான் அந்த உடலுக்கு மரியாதையோ அதுபோல். உடல் என்பதற்கு இந்த காரணத்தினால் தான் மெய் என்று மற்றொரு பெயர். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய்யாக பொருள் படுவது போல் தனித்து ஒலி எழுப்ப கூடிய அந்த உயிர் எழுத்தையும் ஃ எனும் ஆயுத எழுத்து கொண்டு உயிர்மெய்யுடன் இணைத்து பொருள் விளங்க செய்கிறார் அந்த தமிழ் எனும் மொழி படைத்த தெய்வமாகிய முருகன். வாழ்வின் சாராம்சத்தை இந்த தமிழ் மொழி எழுத்துக்கள் வைத்து உணரலாம்.தமிழ் ஒரு தெய்வீகமான மொழி என்பதற்கு இதுவே ஒரு சான்று.