ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி - ஐந்தாம் திருமொழி - தருதுயரம்தடாயேல் - பாடல் 5 - பொருள்
பயங்கரமான கண்களையுடைய வலிய குவலயாபீடமென்னும் யானையை கொன்றவனே! திருவித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமானே!
வேறு யாரிடத்தில் போய் உஜ்ஜீவிப்பேன் உனது உபய பாதங்களையே நான் சரணமடைவதல்லாமல் ?
நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல் அலையெறிகிற கடலினிடையிலே திரும்பிவந்து தான் முன்பு
பொருந்திய
மாக்கலத்தினுடைய பாய்மரத்தின் மீது சேர்கிற பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்.
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்!
Translation
Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi - Aindhaam Thirumozhi - Tharuthuyaramthadaayel - Song 5 - Meaning
Oh Lord who is gracing at the divine Thiruvuiththuvakkodu, who killed the mighty elephant with fierceful eyes Kuvalayabeedam!
Without surrendering at your divine feet that protects people where else will I go and survive?
After going on all four sides and unable to locate the shore anywhere, caught in the midst of a wavy ocean, returning back to that over which it travelled,
the high sail mast on the big boat, is the large bird and my situation is comparable to that!