M.R.V.Creations

நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

NAALAAYIRA DHIVYA PRABHANDHAM - நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


MUDHALAAYIRAM - முதலாயிரம்


Srimathe Ramanujaya Namaha - ஷ்ரீமதே ராமானுஜாய​ நமஹ​

।। ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி ।।


ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - மன்னுபுகழ் - ஸ்ரீ ராமருக்கு தாலாட்டு பாடல் 2 ( பிரபந்தத்தில் பாடல் 720 )

புண்டரிகமலரதன்மேல் புவனியெல்லாம்படைத்தவனே
திண்டிறலாள்தாடகைதன் உரமுருவச்சிலைவளைத்தாய்
கண்டவர்தம்மனம்வழங்கும் கணபுரத்தென்கருமணியே
எண்டிசையுமாளுடையாய் இராகவனே! தாலேலோ. 2

Transliteration - English


।। Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi ।।

Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi - Ettaam Thirumozhi - Mannupugazh - Lullaby to Shri Rama Song 2

Punndarigamalaradhanmel bhuvaniyellaampadaiththavane
Thinndiralaalthaadagaithan uramuruvachchilaivalaiththaai
Kanndavarthammanamvazhangkum kanapuraththenkarumaniye
Enndisaiyumaaludaiyaai Raaghavane! Thaalelo. 2

மொழிபெயர்ப்பு


ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - மன்னுபுகழ் - ஸ்ரீ ராமருக்கு தாலாட்டு பாடல் 2 - பொருள்

திருநாபியில் அலர்ந்த தாமரைப் பூவின்மேல் பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக உலகங்களெல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
த்ருடமான பலத்தையுடையவளான தாடகையினுடைய மார்பைத் துளைக்கும்படியான வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
ஸேவித்தவர்கள் தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீல ரத்னம் போன்ற எம்பெருமானே!
எட்டுத்திக்கிலுள்ளவர்களையும் அடிமை கொண்டருளுபவனே! ஸ்ரீ ராமனே! உனக்குத் தாலாட்டு.



ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்!


Translation


Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi - Eighth Thirumozhi - Mannupugazh - Lullaby to Shri Rama Song 2 - Meaning

The One who did creation of this entire universe and worlds through Lord Brahma who arose from the freshly blossomed lotus flower from your divine navel!
The One who using His bow and arrows aimed at the powerful Thaadaka demoness killing her as they pierced her chest!
All those who prayed you willingly surrender themselves to you whole heartedly at Thirukannapuram where you have graced as like a blue gem, Oh my Lord Narayana!
People in all eight directions willingly enslave themselves to you as you grace them all with your kindness! Sri Rama! Here is my lullaby to you.

Sri Kulasekarap Perumaal Thiruvadigale charanam!


Youtube Link to பெருமாள் திருமொழி - எட்டாம் திருமொழி - மன்னுபுகழ் - பாடல் 2



Om Namo Narayanaa!!



Sarvam Krishnaarpanamasthu! Om Tat Sat!